யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் விண்ணப்பம்

சிவரமணி புலமைப்பரிசில்

(இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்களுக்கானது)

  • இந்தப் புலமைப்பரிசில் முதலாம் ஆண்டின் அனைத்து பாடநெறி அலகுகளுக்கும் (Course units) கணிக்கப்பட்ட GPA 2.75 இற்குக் குறையாமலோ அல்லது முதலாம் ஆண்டில் வழங்கப்பட்ட பாடநெறி அலகுகளில் சராசரியாக 55 புள்ளிகளுக்குக் குறையாமலோ பெற்ற,

மற்றும்

  • குடும்ப வருமானம் தேசிய சராசரி குடும்ப வருமானத்தை விட குறைவாக உள்ள மாணவர்களின் விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் வருட மாணவர்களில் ஒருவருக்கு வழங்கப்படும்.

வழங்கப்பட்டுள்ள QR குறியீடுகள் மூலம் Google Form-ஐ பெறலாம்.

  1. விண்ணப்பதாரர்கள் மகாபொல உதவித்தொகை / Bursary தவிர வேறு எந்த நிதி உதவியையும் பெறுபவர்களக இருக்கக்கூடாது.
  2. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து A4 தாளின் இருபுறத்திலும் அச்சிட வேண்டும்.
  3. விண்ணப்பப் படிவம் முழுமையாகவும் சரியாகவும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  4. சான்றளிக்கப்பட்ட சம்பள விபரங்கள் இல்லாதவிடத்து, கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் மூலம் பெறப்பட்ட வருமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  5. ஒவ்வொரு மாணவரும் ஒரு விண்ணப்பம் மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
  6. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 26 ஆடி 2026 அன்று அல்லது அதற்கு முன் மாணவர் நலச்சேவைகள் கிளைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  7. Google Form மற்றும் ஆதார ஆவணங்களின் அச்சு பிரதியுடன் கூடிய விண்ணப்பம் ஆகிய இரண்டையும் விண்ணப்ப முடிவு தேதிக்கு முன்பு நலச்சேவைகள் கிளையில் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களே தேர்விற்காக பரிசீலிக்கப்படுவர்

Google Form

Downloads

CLOSING DATE

சிரேஷ்ட உதவிப் பதிவாளர்,

மாணவர் நலச்சேவைகள் கிளை.

26.06.2026.

Scroll to Top